அதிரைபிறைக்கு முகநூலில் அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி!வன்மையாக கண்டிக்கிறது அதிரை பிறை!

அதிரை பிறை இணையதளம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நல்ல செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வாசகர்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகமாக உள்ளது. இந்நிலையில் அதிரை பிறையின் வளர்ச்சியை தாங்க முடியாத சிலர் நமது இணையதளத்திற்கும், நமது செய்தியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் அதிரை பிறை இணையதள முகநூல் கணக்கிற்கும், நமது செய்தியாளர்களின் முகநூல் கணக்கிற்கும் அசிங்கமான ஆபாசமான படங்களை டேக் செய்துள்ளனர். இதை பார்த்த அதிரை பிறை இணையதள முகநூல் நண்பர்கள் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த நபரை பற்றி விசாரித்தனர் மற்றும் புகைப்படங்களை நீக்கும் படியும் கேட்டு கொண்டனர் .

இப்படிபட்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாளொன்றுக்கு ஏராளமான வாசகர்கள் பார்வையிடும் ஒரு முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு அதிரை பிறையின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதை நமது கணக்கில் பதிந்தது ஏற்கணவே ஹேக்கிங் செய்யப்பட்ட ஐ.டி என்பது விசாரித்ததில் தெரியவந்தது. இதுபோல் நமதூரில் பலரது முகநூல் ஐ.டி சில விஷமிகளால் திருடப்பட்டு இது போன்ற தவறான செயல்களிக்காக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தவறுகளை மேலும் செய்ய முயலும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்கப்படும் என கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: நமதூரில் இது போல் பலரது முகநூல் கணக்குகள் திருடப்பட்டு அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் சில விஷமிகளால் நடைபெற்று வருகிறது. எனவே தங்கள் முகநூல் கடவுச்சொல்லை பிறருக்கு தெரியாமல் கவனமாக இருப்பதுடன், பிறருடைய செல்போனிலோ அல்லது ப்ரொவ்சிங் செண்டரிலோ முகநூலை உபயோகித்தால் அதனை லாக் அவுட் செய்து விட்டோமா என்பதை உறுதி செய்துக் கொள்ளவும்.

-அதிரைபிறை குழு

Advertisement

Close