ஹைதராபாத் போலிஸின் நெஞ்சை நெகிழ வைத்த இஸ்லாமிய மாணவர்

islamic ATM man adiraipiraiஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் அப்துல் லத்தீப் ATM இயந்திரத்தில் ரூ 200 பணம் எடுத்துள்ளார். அப்போது ATM இயந்திரத்தின் பணம் வரும் பகுதி பழுதடைந்து திறந்து கொண்டதால் ரூ 24 லட்சம் சடசடவென வெளியே வந்துள்ளது. அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை. ரூ.200 எடுக்க சென்று ரூ 24 லட்சம் சடசடவென வெளியே வந்தவுடன் திகைத்து போன ஷேக் அப்துல் லத்தீப் தன்னுடைய நண்பனை வரவழைத்து காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

அனைவரும் அங்கு வந்து பார்த்த போது ரூ 24 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது. அனைவரும் ஒரு நொடியின் அதிர்ச்சியடைந்து மாணவன் ஷேக் அப்துல் லத்தீபை கட்டியணைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப்பட்டது.

நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு இந்த சம்பவத்திற்கு ஆளான மாணவன் ஷேக் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர். போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி அந்த மாணவனைப் பாராட்டி பணமுடிப்பும் கொடுத்து கௌரவரவப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் மறைத்து விடும்.

பணத்திற்காக கொலை செய்யும் இந்த உலகில் ரூ 24 லட்சம் கிடைத்தும் அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்ட முஸ்லிம் மாணவன் ஷேக் அப்துல் லத்தீப் மீது ஏக இறைவன் தனது நல்லருளை பொழிவானாக…

Close