குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி

saudi plane adiraipirai
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவுதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்டது சவுதி விமானம்.

இதில் ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று பயணித்தது. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது.


இது விமானிக்கு தெறியபடுத்தவே தனது விமனத்தின் பயணபாதையை உடனடியாக மாற்றி விமானத்தை அவர் மஸ்கட் விமான நிலையத்தில் உடனடியாக தரை இறக்கி அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை அல்லாஹ்வின் உதவையை கொண்டு காப்பாற்றினார்.

மஸ்கட்டில் அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யபட்டது. இப்போது அந்த குழந்தை சீரான நிலைக்கு வந்த பிறகு விமானம் மறுபடியும் ரியாத்தை நோக்கி பயணித்தது.

சவுதி விமானியின் இந்த மனிதநேய பணி அனைத்து பயணிகளின் ஆதரவையும் பெற்றது.

 

Close