கலெக்டர் சுப்பையன் தலைமையில் சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்

collector independent day

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்து பேசியதாவது, சுதந்திர தினவிழாவில் போலீசார், ஊர்காவல் படை, சாரண மற்றும் சாரணிய மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடத்த வேண்டும். விழா நடக்கும் இடத்தில் நடமாடும் மருத்துவக்குழு உரிய மருந்து பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்கள் விழா நடக்கும் இடத்தை முற்றிலும் தூய்மை செய்ய வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை  நிகழ்ச்சி நடத்த வேண்டும்.தேவையான உணவு, போக்குவரத்து வசதிகளும் செய்ய வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதில் DRO சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கரநாராயணன், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Close