உலகின் வலிமை வாய்ந்த தலைவர் சவுதி மன்னர் சல்மான்! அமெரிக்க பத்திரிக்கை தேர்வு

saudi mannar salman adiraipirai

உலகின் சக்தி வாய்ந்த மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களை அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது. அண்மையில் நியூயார்க் டைம்ஸ் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் சவூதி அரேபிய அரசர் சல்மான் அவர்களை தேர்வு செய்துள்ளது. சவூதி மன்னர் சல்மான் அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒருசில மாதங்களிலேயே உலக நாடுகளை தன் வசம் திரும்ப பார்க்க வைத்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

அவற்றில் சில…

1. பாலஸ்தீன் மற்றும் உலக முஸ்லிம்களை காப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தது.

2. இஸ்லாமிய சட்டத்தை விமர்சித்த ஸ்வீடனை மன்னிப்பு கேட்க வைத்து பணிய வைத்தது.

3. அமெரிக்க அதிபர் ஒபாமாவை காக்க வைத்தது.

4. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை கூட்டணியில் இணைக்காமல் முஸ்லிம் நாடுகளை மட்டும் இணைத்து தனி ராணுவப்படை அமைத்து ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளை நிர்மூலமாக்கியது.

5. ஏமன் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து ஈரான், ரஷ்யா, சிரியா ஆகிய நாடுகள் ஓரணியில் இருந்தும் ஏமன் போர் தொடர்பாக உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காத அளவுக்கு ரஷ்யாவை பணிய வைத்தது.

இப்படி தொடர்ச்சியாக சல்மான் அவர்களின் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை அவரை நோக்கி திரும்ப வைத்துள்ளது. ஆட்சி பொறுப்பிற்கு வந்து ஒருசில மாதங்களிலேயே வலிமை மிகுந்த தலைவர் பட்டியலில் இடம் பெற்றது அவரது நேர்மைக்கும், மன உறுதிக்கும் கிடைத்த பரிசாக கருதப்படுகிறது. 

செயது அலி ஃபைஜி

Close