பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் அதிரை காதிர் முகைதீன் பள்ளி வெற்றி!(படங்கள் இணைப்பு)

தேசிய இளைஞர் தின கைப்பந்து போட்டி பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது .இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகள்  கலந்து கொண்டது.இந்த போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது .இதில் அதிரை காதிர் முகைதீன் பள்ளி vs அதிரை இமாம் ஷாபி பள்ளி அணி மோதின .

பரப்பரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் சுற்றில் காதிர் முகைதீன் பள்ளி வெற்றி பெற்றது .இரண்டாம் சுற்றில் இமாம் ஷாபி பள்ளி அணி வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தது .இறுதி சுற்றில் 23-25 என்ற கணக்கில் காதிர் முகைதீன் பள்ளி வெற்றி பெற்றது . அதிரையை சேர்ந்த இவ்விரு அணிகளும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் தலைசிறந்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வரவேற்புரை திரு.R.முத்துசாமி அவர்கள் வழங்கினார்கள் . மேலும் திருமதி.வளர்மதி (D.E.O.பட்டுக்கோட்டை),திரு.L.மனோகரன் (தலைமையாசிரியர் ,துவரங்குறிச்சி அரசு பள்ளி),திரு.A.மஹபூப் அலி (தலைமையாசிரியர் ,காதிர் முகைதீன் பள்ளி ,அதிராம்பட்டினம்) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள் .இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற அணிகளின் விபரங்கள்:
முதல் பரிசு :காதிர் முகைதீன் பள்ளி ,அதிராம்பட்டினம்
இரண்டாம் பரிசு:இமாம் ஷாபி பள்ளி ,அதிராம்பட்டினம் 
முன்றாம் பரிசு :ஸ்ரீனிவாச பள்ளி ,ஒரத்தநாடு 
நான்காம் பரிசு :பிருந்தாவன் பள்ளி ,பட்டுக்கோட்டை 

வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .மேலும் முதல் இடத்தை பிடித்த காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் அதிரை ESC ஜூனியர் அணியில் விளையாட கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத்

Advertisement

Close