Advertisement

' />

அதிரையில் அதிமுகவினர் நடத்திய அமைதி பேரணி!(படங்கள் இணைப்பு)

பேரறிஞர் அண்ணாவின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலை 8 மணியளவில் நடத்தினர்.இந்த பேரணி அதிரை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அரசு பெண்கள் உயர்நிலைபள்ளி வரை அதிமுக நகர செயலாளர் பிச்சை தலைமையில் சென்றனர்.  

இதனை தொடர்ந்து திரு.அண்ணா அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க வினரால் மரியாதை செய்யப்பட்டது. இந்த பேரணியில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் அபூபக்கர், நகர துணைச்செயலாளர் முஹம்மத் தமீம்  , வார்டு கவுன்சிலர்கள்சிவக்குமார், ரவிக்குமார், அபூதாகிர், அப்துல் லத்தீப், சேனா மூனா ,அதிமுக கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Advertisement

Close