அதிரையர்களின் தினசரியும்… நாளிதழ்களின் மதவெறியும்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

image

அதிரையை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாக முதியவர்களும் சரி, இளைஞர்களும் சரி அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பலர் ஏதாவது ஒரு நாளிதலை வாங்கிப் படிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். என்னதான தொழில்நுட்பம் வளர்ச்சியால் தொலைக்காட்சியில் உடனடி செய்திகளும், இணைதளங்களில் பலதரப்பட்ட செய்திகள் வந்தாலும், இந்த தினசரி செய்திதாள்கள் மீது தான் அதிகம் நம்பிக்கை வைத்து அதிகம் வாங்கிப் படிக்கின்றனர்.

image

ஆனால் இன்று கணிசமான செய்தித்தாள்கள் தங்கள் மீதுள்ள சமுகப் பொறுப்பை மறந்து, வியாபார நோக்கத்துடனும், அரசியல் நோக்கத்துடனும், மதவெறியை தூண்டும் விதத்திலும் செய்திகளை பதிவிடுகின்றனர். இதற்க்கு எந்தவொரு செய்தித்தாளும் விதிவிலக்கல்ல.

இப்படி இருந்தும் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை உடனுக்குடன் தொலைக்காட்சி செய்தியில் பார்த்தாலும் மறுநாள் ஏதாவது ஒரு செய்தித்தாளை வாங்கிப் ஒரு வரி விடாமல் முழு விபரத்தை படித்தால் தான் சிலருக்கு முழு திருப்தி வரும். இந்த அளவுக்கு அவர்கள் இந்த செய்தித்தாள்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

image

அதிகாலை அமைதியான மனதோடு ஒரு செய்திதாளை வாங்கினால் அதில் முதல் பக்கத்தின் தலைப்பு செய்தியில் “குண்டு வெடிப்பு! தீவிரவாதி கைது” அல்லது கொலை கொள்ளை வேறு ஏதாவது பரபரப்பான செய்திகளை வழங்கி வாசகர்களின் அமைதியை கெடுத்துவிடுகின்றனர். இதனை விட மக்களுக்கு மிகவும் முக்கியமான செய்திகள் கடைசி பக்கத்தின் மூலையில் இருக்கும். மேலும் இதை படிப்பவர்கள் மனதில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற நஞ்சு விதைக்கப்படுகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கு கூட இதனை செய்தது இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்று பதிகின்றனர். இவர்களின் சந்தேகமே இவர்கள் மதவேறியர்கள் என உறுதிபடுத்துகின்றது. சிறுபான்மை மக்களுக்கு செய்யப்படும் துரோகங்களுக்கு எதிராக இந்த நாளிதழ்கள் என்றாவது குரல் கொடுத்ததுண்டா.

கல்வியை விற்கும் பிரபலமாகாத அடிப்படை வசதியில்லாத கல்லூரிகளுடன் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு என்று நடத்தி அப்பாவி மாணவர்களை பாலுங்கிணற்றில் தள்ளி விடுகின்றனர். இதுதான் அவர்களின் சமுகப்பொறுப்பா?

image

சமுக அக்கரையுள்ள ஒரு சிலர் நல்லெண்ணத்துடன் செய்தித்தாள்களை துவக்கினால் பெரிய செய்தித்தாள்களின் தொடர்நெருக்கடி காரணமாக செய்தித்தாள்கள் பணியை அவர்களால் தொடர முடியாமல் விட்டுவிடுகின்றனர்ம் இவாறு பாதியில் நிறுத்தப்பட்ட நல்ல செய்தித்தாள்கள் ஏராளம்.

15 பக்கம் உள்ள செய்தித்தாளை வாங்கினால் அதில் 7 பக்கங்களில் ஆபாச படங்களும், நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும் தான் அதிகம் காணமுடிகின்றது. இப்படி சமுகப் பொறுப்பற்று அபாசத்தையும், அரசியைலையும், பணத்தையும் நாடி ஈணப்பிழப்பு நடத்தும் இந்த நாளிதழ்கள் ஒரு சிலர் செய்யும் குற்றத்திற்க்காக இறக்கத்தையும், பணிவையும், மரியாதையையும், ஒழுக்கத்தையும், உண்மையான ஆண்மீகத்தையும் போதிக்கும் மேண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களை மதவெறியுடன் தீவிரவாதிகள் என்று பதிகின்றனர். உண்மையை மறைத்து, அமைதியை குலைத்து, கலவரங்களை தூண்டும் மதச்சாயம் பூசிய கருத்துக்களையும், பொய்யான செய்திகளையும் வெளியிடும் இவர்கள் தான் உண்மை தீவிரவாதிகள். அரசியல்வாதிகளிடமும், மதவெறியர்களிடமும், ஜாதிவெறியர்களிடமும், பணத்தாசை கொண்ட கொடூரர்களிடமும் இன்றைய நாளிதழ் துறை சிக்க சின்னாப்பின்னமாகிவிட்டன.

image

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பிழைப்பு நடத்தும் இவர்களின் லாபத்திற்க்கு நாமும் ஒரு வகையில் காரணமாகிவிடுகின்றோம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author