அப்துல் கலாமின் மறைவும்! பள்ளி, கல்லூரிகளின் விடுமுறையும்

kalam2

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து சென்றார். அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்துவிட்டாராம் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள Bethany மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 7 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோதே கலாமின் உயிர் பிரிந்திருந்தது என அந்த மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டேவிட் சைலோ தெரிவித்துள்ளார். 7.45 மணிக்கு கலாம் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மருத்துவமனை. கடுமையான மாரடைப்பால்தான் கலாம்-ன் உயிர் பிரிந்திருக்கலாம் என்கிறார் டேவிட் சைலோ.

இதன் காரணாமாக தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Close