அதிரை வாய்க்கால் தெருவில் என்றுதான் தீரும் இந்த அவலம்!

அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாயிலில் பல ஆண்டுகளாக அப்பகுதியினர் குப்பை கொட்டுகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் விரைந்து அள்ளப்படாமல் காலம் கடந்து அள்ளப்படுவதால் அப்பகுதி குப்பை மேடாகவே மாறிவிட்டது எனலாம். இதனால் அப்பகுதி மக்கள், பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்களும் இப்பள்ளி சிறுவர் சிறுமிகளின் நலனில் கருத்தில் கொண்டு குப்பைகளை இங்கு கொட்டுவதில் இருந்து தவிர்க்கலாம். இங்கு கொட்டப்படும் குப்பைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகமும் விரைந்து இப்பகுதியில் குப்பைகளை அள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close