அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு விழா!(படங்கள் இணைப்பு)

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடந்து முடிந்தது . முன்னதாக திரு P.பார்தசாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் . சிறப்பு விருந்தினராக திரு.D.ரவிசந்தர் (தலைவர் ,தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் & உடற்கல்வி இயக்குநர் சங்கம்) கலந்து கொண்டார் . இமாம் ஷாஃபி பள்ளி மூத்த முதல்வர் ஹாஜி.S.பரகத் சார் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள் . இந்நிகழ்ச்சியில்  பெற்றோர் ஆசிரியக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இமாம் ஷாஃபி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.D.கார்த்திகேயன் அவர்கள் ஆண்டு அறிக்கை வாசித்தார்கள்.இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . வந்திருந்த அனைவரையும் பள்ளியின் மூத்த முதல்வர். தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனர்.


  

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இமாம் ஷாஃபி பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி சென்றனர் .

செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மத் பிலால்

Advertisement

Close