இஸ்லாத்திற்கு மாறிய ஜெர்மனி கால்பந்தாட்ட வீரர்!

ஜெர்மனி நாட்டின் க்ளப் கால்பந்து அணிகளில் ஒன்றான FC Nürnberg அணியில் விளையாடி வருபவர் டேனி ப்ளம். 24 வயதான இவர் இந்த அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் இவருக்கு 6 மாதங்கள் ஓய்வு வழங்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அப்போதுதான் இவருக்கு மறுமை பற்றிய சிந்தனையும், நம் வாழ்க்கைக்கு பிறகு என்ன நடக்கும் என்ற சிந்தனையும் வந்துள்ளது. அடுத்த கணமே இவரின் மனதில் தோன்றியது இஸ்லாம். உடனே அருகில் உள்ள பள்ளிவாயிலுக்கு சென்றவர் அங்கு தான் நாடிய ஏதோ ஒன்று அவருக்கு கிடைத்த திருப்தி. இந்த மார்க்கம் குறித்து மேலும் பலவற்றை அறிய விருப்பப்பட்டு தினமும் பள்ளி வாசலுக்கு சென்றவர் முழுமையாக இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறி ஐ வேலை தொழுகையை நிறைவேற்றி வருகிறார்.

பிறவி கிருஸ்தவரான இவரது பெற்றோர்களிடம் இது குறித்து எடுத்து கூறியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறினார். “அல்லாஹ் இவருடைய பெற்றோர்களுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக”

-நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Advertisement

Close