குவைத்தில் நெஞ்சம் நெகிழ வைத்த அதிரையர்!

மக்களின் ஜனரஞ்சக ஊடகங்களான தொலைக்காட்சி, நாளிதழ், சினிமா உள்ளிட்டவைகள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுபவர்கள் தமிழக அளவில் கடந்த 10 ஆண்டுகளாக இரத்ததானத்திலும், ஆம்புலன்ஸ் சேவையிலும் முதலிடம் இருந்து வரும் இஸ்லாமிய அமைப்புகளை பற்றி வெளிப்படுத்தாததை போன்று…

குவைத்தில் நெஞ்சம் நெகிழ வைத்த ஒரு இந்தியரை பற்றி இப்பதிவில் காண்போம்….

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஃபாரூக், இவர் பல ஆண்டுகளாக குவைத்தில் நேர்மையாக பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் வெளியில் சென்று விட்டு திரும்புகையில்….

சாலையில் ஒரு பர்ஸ் கிடந்துள்ளது, அந்த பர்ஸை சோதனையிட்ட போது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் இருந்துள்ளது.

இஸ்லாமியர்களின் வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே கிடக்கும் பொருளை எடுப்பவர் முறையான அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கூறிய நபிமொழியை கவனத்தில் கொண்டு….

அந்த பர்ஸை சால்மியா காவல்நிலையத்தில் முழு விவரத்தையும் சொல்லி ஒப்படைத்து விடுகிறார்.

அதன்பிறகு சால்மியா காவல்நிலையத்தில் பர்ஸின் உரிமையாளர் புகார் தெரிவிக்க வரும் போது காவல்துறை அதிகாரிகள் இந்த பர்ஸையும் கொடுத்து முஹம்மது ஃபாரூக்கின் முகவரியையும் கொடுத்து விடுகின்றனர்.

அதனைதொடர்ந்து நேரில் வந்தவர் முஹம்மது ஃபாரூக்கை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து நெஞ்சம் நெகிழ நன்றி கூறியுள்ளார்.

மேலும் அன்பளிப்பாக சில தொகையும் கொடுத்துள்ளார். அதனை முஹம்மது பாரூக் முற்றிலுமாக மறுத்துவிட்டு கூறியுள்ளார் – இது தான் இஸ்லாம்….!!

யாரும் இல்லாத இடத்திலிருந்து பெரிய தொகை கிடைக்கும் போது அதை மனிதர்கள் பார்க்காமல் இருக்கலாம் படைத்த இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற இறை அச்சத்தோடு…

கீழே கிடக்கும் பொருளை யார் எடுத்தாலும் அதைப்பற்றி முறையான அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கூறிய இறைத்தூதர் அவர்களின் வார்த்தையை அழகிய முறையில் செயலில் காட்டிய அதிராம்பட்டிணம் முஹம்மது ஃபாரூக் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வுடைய நல்லருள் என்றென்றும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்வோமாக…

இஸ்லாமியர்களின் மாண்புகளை வெளிப்படுத்தும் இதுப்போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

Advertisement

Close