மதுக்கூர் பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையும் கோட்சேவுக்கு ஆதரவா….?


பேனருக்கு பின்னாலே யாரு சிலை மறைந்திருக்கிறது தெரியுதா…?

அட நம்ம மகாத்மா காந்தி சிலை தான்..

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மணிக்கூண்டு அருகில் இருக்கிறது காந்தி சிலை.. இது நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால் பல நிகழ்ச்சிகளுக்கு நான்காம் புறமும் பேனர்கள் (விளம்பர பதகைகள்) இங்கு அதிகமாகவே காணப்படும்…

ஆனால் தற்பொழுது பல விதிமுறைகள் கொண்டு வந்துள்ளதால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பேரூராட்சி மற்றும் காவல்துறையினரால் விளம்பர பதகைகள் வைக்க அனுமதிபடுவதில்லை நமக்கு…

நாமும் அதை பின்பற்றி விளம்பர பதகைகளை தவிர்த்து கொண்டு இருக்கிறோம்..

ஆனால் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களுக்கும், காந்தியை கொன்ற கும்பலுக்கும் , ஒரு சில ஜாதியினருக்கு மட்டும் பேரூராட்சி மற்றும் காவல்துறை அனுமதிப்பது ஏனோ…?

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இப்படி தான் காந்தி சிலையை மறைத்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவரின் தாயார் தவசத்திற்கு விளம்பர பதாகையை வைத்தார்…அப்பொழுது இந்த விதிமுறைகள் எங்கே போனது…? பேரூராட்சி நிர்வாகத்திற்கும் காவல்துறையிக்கும் அப்பொழுது தெரியவில்லை…

படப்பைகாட்டில் நடந்த அதிமுக பிரமுகரின் திருமணத்திற்கு அமைச்சர் வருகை தந்த பொழுது காந்தி சிலையை மறைத்து விளம்பர பதகைகள் வைத்தார்கள் அப்பொழுதும் அப்புறபடுத்த வில்லை….விதிமுறைகள் பின்பற்றபடவில்லை…

இன்று ஜனவரி 26 குடியரசு தினம் தேவர் சமூகத்தை சார்ந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு காந்தி சிலையை மறைத்து விளம்பர பதகை வைக்கப்பட்டுள்ளது…இப்பொழுதும் விதிமுறைகள் பின்பற்றபடவில்லை … இதையும் அப்புறபடுத்த போவதில்லை…

ஆனால் இஸ்லாமிய இயக்கங்கள் விளம்பர பதைகளுக்கு அனுமதி கேட்கும் பொழுது பேரூராட்சி நிர்வாகமும் , காவல்துறையும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்றி அனுமதியை மறுக்கிறார்கள்..

உங்கள் விதிமுறைகளை நாங்கள் மதிக்கின்றோம்!!! ஆனால் அதே விதிமுறையை அனைவருக்கும் பின்பற்ற வேண்டும்…

பின்பற்ற தவறிவிட்டால் பேரூராட்சி நிர்வாகமும் , காவல்துறையும் போராட்டத்தை சந்திக்க நேரிடும்…

அது மட்டும் அல்ல மகாத்மா காந்தி சிலையை மறைத்து வைக்ககூடிய விளம்பர பதகைகளை அப்புறப்படுத்துங்கள்… நாடு முழுக்க காந்தியை கொன்ற தீவரவாதி கோட்சேவுக்கு சிலை வைக்க போவதாக ஒரு கூட்டம் அறிவித்து இருக்ககூடிய நிலையில்…காந்தியை மறைத்து வைக்க கூடிய விளம்பர பதகைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அப்புறபடுத்தவில்லை என்று சொன்னால் பேரூராட்சியும் நிர்வாகமும் , காவல்துறையும் ” காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பதை ஆதரிக்கிறார்களோ என்ற எண்ணம் எங்கள் மனதில் தோன்றுகிறது….

இதே நிலை நீடித்தால் சரியா வரது , சரியா இருக்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்…

தகவல் :மதுக்கூர் ஃபவாஸ் (தமுமுக நகர செயலாளர்)

Advertisement

Close