அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அது போல் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று காலை 9 மணியளிவில் குடியரசு தின விழா துவங்கியது. இதில் கல்லூரி NCC மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புக்கு பிறகு தேசிய கொடியை கல்லூரி முதல்வர் ஜலாலுத்தீன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள். இதில் கல்லூரி முன்னால் முதல் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close