அதிரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அது போல் அதிரை அரசினர் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் ஏற்றி வைத்தார்கள். இதில் சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வளர்ச்சி குழு தலைவர் சேனா மூனா,கூட்டுறவு வங்கி துணை தலைவர் M.A.முஹம்மத் தமீம் ,நகர அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் அஹ்மத் தாகிர் ,கவுன்சிலர்கள்  மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


 

Advertisement

Close