Advertisement

' />

அதிரையில் புதிய வண்ண வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி “தேசிய வாக்காளர் தினம்”. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
இதையடுத்து இன்று அதிரையிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி துவங்கியது .இந்த முகாம் அதிரையில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மூலம்  புதிய  வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது .  

Advertisement

Close