பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து முதல் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி !(படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் நடத்தும்  கால்பந்து லீக் தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மாலை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் துவங்கியது.இதை திரு.N.R.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்),திரு S.R.ஜவகர்பாபு (பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர்) ஆகியோர் துவங்கி வைத்தனர் .

முன்னதாக திரு M.K.சிவனாந்தம் (தலைவர்,தஞ்சை கால்பந்து கழகம்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மேலும் இதில் திரு M.கோவிந்தராசு (தலைமையாசிரியர் அ.ஆ.மேல்நிலை பள்ளி,பட்டுக்கோட்டை),திரு S.மயில்வாகணன் (நகர் மன்ற உறுப்பினர்,),நல்லாசிரியர் திரு N.கோபால கிருஷ்ணன் (துணை தலைவர், தஞ்சை கால்பந்து கழகம்),திரு M.A.முகமது தமீம் (துணை தலைவர் ,தஞ்சை கால்பந்து கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் vs பட்டுக்கோட்டை AVK FC அணியினர் மோதினர் .இதில் அதிரை AFFA அணியை சேர்ந்த அஸ்ரப் 1 கோல்களும், சபானுதீன் 1 கோலும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தனர்.ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணி வெற்றிபெற்றனர்.
செய்தி மற்றும் புகைப்படம்:
காலித் அஹ்மத்  

Advertisement

Close