இது தான் சவுதி அரேபியா!

சவுதி மக்களின் மற்றும் உலக முஸ்லிம்களின் அன்பிற்கு பாத்திரமான மன்னர் அப்துல்லா இறைவனடி சேர்ந்து விட்டார்!

இவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு தலைவர் இறந்துள்ளார். ஆனால் சவுதியில் அன்றாட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஊரைப் போல் கடைகள் அடைக்க நிர்பந்திக்கப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் எந்த பயமும் இன்றி வழமைபோல் செல்கின்றன. மொத்தத்தில் இவரது இழப்பு சவுதியின் அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

எல்லோருக்கும் எங்கு இறப்புக்கான தொழுகை நடைபெறுமோ அந்த இடத்தில் இவருக்கும் தொழுகை நடத்தப்படும். எல்லோரையும் புதைக்கக் கூடிய பொது மைய வாடியில் இவரது உடலும் அடக்கம் செய்யப்படும். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெரினா பீச்சில் நாம் பார்ப்பது போல் எந்த கட்டிடங்களும் கட்டப்படாது. வெறும் மண்ணைக் கொண்டு இவரது உடல் மூடப்படும். இறப்புக்கு முன்னால் தான் அவர் சவுதியின் மன்னர். இறப்புக்கு பின்னால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன்தான். அதனை செயலில் காட்டி வருகின்றனர் சவுதி ஆட்சியாளர்கள்.
நன்றி : சுவனப்பிரியன்.

Advertisement

Close