அதிரையில் தன் பிள்ளைகளை மக்தபிற்கு அனுப்பும் பெற்றோர்களின் கவனத்திற்கு!அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் நமது ஊரில் முன்பே இருந்ததை விட மார்க்க கல்வியை கற்க நம் வீட்டு பிள்ளைகள் ஆர்வம் கொண்டு இருக்கின்றன..
 
பல உலமாக்களிம் உதவியாலும் பெற்றோர்களின் வரவேற்பாலும் பிள்ளைகளின் ஆர்வத்தாலும் நமது ஊரில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் மார்க்க கல்வியை கற்க காலை சுபுஹ் தொழதவுடன் ஆர்வமுடன் வருகை தந்துக்கொண்டு இருக்கின்றனர்..
மாணவர்களுக்கு அந்த அந்த முஹல்லா பள்ளிகளிலும் மாணவிகளுக்கு அந்த அந்த முஹல்லாவில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் மக்தப் பாடம் சிறப்பான முறையில் அல்லாஹ்வின் உதவியோடு நடைப்பெற்று வருகின்றது.

சரி விஷியத்துக்கு வருவோம்.
அப்படி நல்ல சூழல் நடைப்பெற்று கொண்டு இருக்கும் வேளையில்
சில மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்தப் விட்ட பிறகு தெருக்களின் நின்று நேரத்தை போக்கிவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்து
வீட்டில் தனது பெற்றோர்களிடம் மக்தப் லேட்ட விட்டாக என பொய் சொல்லி பெற்றோர்களை ஏமாற்றி விடுகின்றனர்.எனவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் ஏமாராமல் கவணமாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
இந்த பதிவு யாரையும் தாக்கிப்போடப்பட்ட பதிவு அல்ல மாறாக அல்லாஹ்வின் திருப்பொருத்தடைய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பெற வேண்டும் என போடப்பட்ட பதிவு…

Advertisement

Close