Advertisement

' />

இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்வு!

கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மொத்தநாட்டு மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகை எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அனமியில் மதவாரியாக நடத்தப்பட்ட   கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்) இரண்டாம் இடத்தை  அஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன.இவற்றுக்கு அடுத்தப் படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது.

நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 24 சதவீதமாக உள்ளது. இது தேசிய மக்கள்தொகை சராசரியை (18 சதவீதம்) விட அதிகமாக உள்ளது.                                                                                              
மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு, மிக விரைவான உயர்வை அஸாம் கண்டுள்ளது. 2001 ஆம்  ஆண்டில் நடத்தப்பட்ட  கணக்கெடுப்பின் போது மாநிலத்தில் 30.9 சதவீதம் இஸ்லாமியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பில் 34.2 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே 8.8. சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகக்  குறைந்துள்ளது. மேற்கு வங்காளமும் இஸ்லாமிய மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்கள்தொகை 25.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய இஸ்லாமிய மக்கள்தொகை (.8 சதவீதம்) சராசரியைவிட இருமடங்கு அதிகமாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள்தொகை 11.9 சதவீதத்தில் இருந்து, 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மற்ற மாநிலங்களியிலும் இஸ்லாமிய மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. கேரளாவில் 24.7 சதவீதத்தில் இருந்து, 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கோவா மாநிலத்திலும் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 67 சதவீதத்தில் இருந்து 68.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரியானாவில் 5.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், டெல்லியில் 11.7 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Close