உடல் நல குறைவால் சவூதி அரேபிய மன்னர் மரணம்!

சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் (வயது 90) உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.00A.M. அளவில்  மரணமடைந்தார். கடந்த சில வாரங்களாக அவர் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

புதிய மன்னராக அவருடைய சகோதரர் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Close