அதிரையில் கலைஞரின் 92வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய தி.மு.க வினர்! (படங்களை இணைப்பு)

இன்றுுதி.மு.க தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று அதிரையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைஞரின் பிறந்த நாளினை கொடியேற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதிரை பேருந்து நிலையம், தி.மு.க கட்சி அலுவலகம், சேர்மன் வாடி,வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி தங்கள் மகிழ்சியை வெளிபடுத்தினர். இதில் தி.மு.க நகர தலைவர் இராம.குணசேகரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், கவுன்சிலர்கள், அப்துல் காதர், அன்சர் கான், சரீப் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close