பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பை வழியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி! (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் இன்று காலை சாலை பாதுகாப்பை வழியுறுத்தியும், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வழியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பட்டுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறையினரால் நடத்தப்பட்டது.

இப்பேரணியை RTO மற்றும் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு துவக்கி வைத்தனர்.

இது குறித்து மக்கள் பொது சேவை ஆர்வலர் திரு.ஸ்டாலின் அவர்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்ததாவது…

“சாலை பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்பேரணி நடத்தப்படுகிறது. இனி வரும் மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரை, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்பேரணி நடத்தப்படும்” என்றார்.

Advertisement

Close