அதிரை 3ஸ்டார் ஜிம் புதிய கிளைக்கு வருகை தந்த பட்டுக்கோட்டை நகர தலைவர்! (படங்கள் இணைப்பு)
 அதிரை 3 ஸ்டார் ஜிம்  ஆஸ்பத்திரி தெருவில் உள்ள சி.எஸ்.சி கணினி பயிற்சி மையத்தின் மேல் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல திறமையான உடற்பயிற்சி கலைஞர்களையும் உருவாக்கி வருகின்றது. இதன் இரண்டாவது கிளை கடந்த 1ஆம் தேதி நமதூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பழைய கனரா வங்கி மாடியில் இனிதே துவங்கியது.

இதனை பார்வையிட இன்று இரவு 8 மணியளவில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு வருகை தந்தார். அதுசமயம் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி.மஹ்பூப் அலி மற்றும் உடற்பயிற்சி கலைஞர்கள் பலர் கலந்துக்கொண்டனர். மேலும் இங்கு உடற்பயிற்சி பயின்ற மாணவர்களின் கட்டுடலை பார்த்து பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜவஹர் பாபு வியந்து பாராட்டி சென்றார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close