அதிரையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக-வினர் நடத்திய அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ராமசந்திரன் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களின் ரசிகர்களாலும், அ.தி.மு.க வினராலும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய அ.தி.மு.கவினர் நகர செயலாளர் தலைமையில் அமைதிப் பேரணி சென்றனர். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ராமசந்திரன் அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க வினரால் மரியாதை செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் கழக நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். Advertisement

Close