அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணுக்கு கிடைத்த வெற்றி!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆடை விற்பனை நிறுவனமான ஆபெர் க்ரோம்பி அண்ட் பிட்ச் எனும் பெரு நிறுவனம் சாமந்தா இலோஃப் எனும் முஸ்லிம் பெண்ணுக்கு வேலை தர மறுத்தது.  காரணம் இலோஃப் தலைத்துணி  அணிந்திருந்தார் என்பதால். வழக்கு நீதிமன்றம் போனது. அமெரிக்க உச்சநீதிமன்றம் முஸ்லிம் பெண்ணுக்கு சாதகமாக அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

அது மட்டுமல்ல, அங்குள்ள முஸ்லிம், கிறிஸ்தவ, யூத, சீக்கிய சமதாயத்தினரும் இலோஃபுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருந்தனர்.  யுஎஸ் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் பணியிடங்களில் தலைத்துணி (ஹெட் ஸ்கார்ஃப்) அணிய இனி எந்தத் தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

-சிராஜுல்ஹஸன்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close