துபாய் எமெரல்ட் கிரிக்கெட் கோப்பை இறுதி போட்டியில் அதிரை அணி தோல்வி!

இன்று காலை துபாயில் “EMERALD LEAGUE V” கிரிக்கெட் போட்டி தொடங்கியது. களத்தில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியும்  அதிரைபாய்ஸ் அணியும் விளையாடியது.

இந்த இரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக இருந்தததால் அதிரை ரசிகர்களுக்கும் முத்துப்பேட்டை ரசிகர்களுக்கும்  இந்த விளையாட்டு நல்ல விருந்தாக அமைந்தது.

முதலில் துடுப்பெடுத்து ஆடத்துவங்கிய  அதிரை அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து 123 ரன் எடுத்தது. அடுத்து ஆடத்துவங்கிய முத்துப்பேட்டை அணியினர் மிக எளிதாக 13 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 124 ரன் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

இறுதியில் முத்துப்பேட்டை மூன்லைட் அணியினர் எமரால்ட் கோப்பையை வென்றனர்.

Advertisement

Close