சவூதியில் அன்பால் அரபிகளின் மனதை வென்ற சிராஜுத்தீன்!

நாகப்பட்டினம் நங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிராஜூதீன். சவுதியின் அல்கசீம் மாநிலத்தில் உனைஸா மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 30 வருடங்களாக பணி செய்து வருகிறார். இவரது வேலை அங்குள்ள அலுவலர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவது. தனது நன் நடத்தையாலும் அழகிய உபசரிப்புகளாலும் அங்கு வேலை செய்யும் சவுதி நாட்டு மக்களின் அன்பை பெற்றுக் கொண்டார். தற்போது விருப்ப ஓய்வில் தமிழகம் திரும்ப முடிவு செய்தார். அவரை வழியனுப்ப அங்குள்ள சவுதிகள் ஒரு பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவினையும் மிக சிறப்பாகவும் நடத்திக் காட்டினர். 

ஒரு சமையல்காரர்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அவரை கட்டித் தழுவி தங்களின் அன்பை வெளிக்காட்டினர். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இன்றி அவரை வழியனுப்பும் விதமாக அவரது முகம் பதித்த கேக்கை தயாரித்து அவருக்காக இந்த விழாவினை கொண்டாடியுள்ளனர். அன்பின் மூலம் யாரையும் நல்லவராகவும் நண்பராகவும் மாற்ற முடியும் என்பதற்க்காக சிராஜுத்தீன் ஓர் உதாரணம்.

Advertisement

Close