அதிரையில் நடமாடும் மர்ம நபர்கள்! எச்சரிக்கை பதிவு!

அதிரையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக அதிரையில் நடந்த திருட்டு சம்பவங்களுக்கு இவர்கள் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

அதிரையில் வீடு வீடாக EB ஊழியர் போலவும், கேஸ் சப்லையர் போலவும், புடவை, புர்கா, பெட்சீட், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பவர் போலவும், தேங்காய் பரிப்பவர் போலவும் அல்லது கணக்கெடுப்பவர் போலவோ சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் வலம் வருகிறார்கள். அதிரைக்கு அருகாமையில் உள்ள பல ஊர்களில் இது போன்ற மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதுபோன்ற நபர்கள் நமதூரிலும் நடமாடுவதாகவும் வீடுகளுக்கு பொருட்கள் விற்க வருபவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர். அன்மையில் அதிரையில் ஒரு வீட்டுக்கு புர்கா வந்த ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்ப்பட்டு அவரை எச்சரித்து அனுப்பியதாக சில இளைஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது போன்று  சில பெண்களும் அப்பாவி மக்களிடம் நாடகமாடி கொள்ளை சம்பங்களில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இது போன்று சந்தேகப்படுமாறு உங்கள் வீடுகளுக்கோ, தெருவிற்கோ மர்ம நபர்கள் வந்தால் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும்.

Advertisement

Close