இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்ப்பில்லை என்பதை வலியுறுத்தி ஜெர்மனின் அனைத்து சமூக மக்களும் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேரணி!

பிரான்ஸில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை முஸ்லிம் விரோதிகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதர்கு கருவியாக பயன்படுத்திவரும் நிலையில்

ஜெர்மன் நாட்டை சார்ந்த அனைத்து மத மக்களும் ஒன்று திரண்டு பிரனாஸ் தாக்குதலுக்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கிழக்கு ஜெர்மனில் உள்ள டிரெஸ்டென்(DRESDEN) நகரில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தினர்

இந்த பேரணியில் கிருத்துவர்கள் யுதர்கள் முஸ்லிம்கள் என 35 ஆயிரம் பொது மக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி நடத்துவதர்கு உரிய அனைத்து உதவிகளையும் ஜெர்மன் அரசு முன் நின்று செய்தது

பிரான்ஸ் தாக்குதலை இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்ப்பு படுத்தும் ஊடகங்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த அந்த பேரணி ஜெர்மனில் முஸ்லிமும் கிருத்துவரும் யுதரும் அண்ணன் தம்பிகளாகவே வாழ்கிறோம் எங்கள் ஒற்றுமையை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது இதே ஒற்றுமையையும் சகிப்பு தன்மையும் உலகெங்கும் தழைத்து ஓங்க வேண்டும் என்ப போன்ற கருத்துகளை கொண்ட பதாகைகளை போராட்ட காரர்கள் கையில் ஏந்தி வந்தனர்

பிரான்ஸ் பிரச்சனைக்காக உலகில் வேறு எங்கும் இது போன்ற ஒரு பேரணி நடத்த படாத நிலையில் ஜெர்மன் மக்கள் முந்தி கொண்டு உலகிற்கு வழி காட்டியிருக்கிறார்

ஜெர்மன் மக்கள் தொடங்கி வைத்துள்ள இந்த ஒற்றுமை கோசம் உலகெங்கும் எதிரொலிக்கட்டும் அதன் பலனாய் உலக மக்களை அமைதி தென்றல் தாலாட்டடும்

ஜெர்மனியின் பிரசிடெண்ட் காவ்க் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசியதாவது:

‘தீவிரவாதிகள் நம்மை பிரிக்க நினைக்கின்றனர். அனால் அது அவர்களுக்கு எதிராகத்தான் முடிந்துள்ளது. இன்று நம்மை அவர்கள்தான் ஒன்றாக்கியிருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களைப் பார்த்து நாங்கள் பயந்து ஓடி விடவில்லை. உங்களை ஓரங்கட்டி விட்டு எங்கள் நாட்டையும் எங்கள் மக்களையும் முன்பு போல் திறம்பட முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.’ என்றார்.

ஜெர்மன் சான்ஸ்லர் பெண்மணி மார்கெல் தனது பேச்சில் ‘ இஸ்லாம் மார்க்கம் ஜெர்மனியின் ஒரு அங்கமாக மாறி விட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது. இந்த நாட்டின் அதிபர் என்ற முறையில் சொல்கிறேன் இங்கு வாழும் அனைத்து இன மொழி மத மக்களும் சிறப்பாக நடத்தப்படுவர். அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறி இருந்தாலும் அவர்களும் இந்நாட்டு பிரஜைகளே! நாம் அனைவரும் ஜெர்மனியர் என்ற உறுதியை மேற் கொள்வோம். தீவிரவாதத்தை முறியடிக்க சபதமேற்போம்’ என்று உணர்வு பூர்வமான உரையை நிகழ்த்தினார்.

‘பெகிடா’ என்ற அமைப்பு ஃப்ரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதலை காரணமாக வைத்து இஸ்லாத்துக்கு எதிரான பேரணியை சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. அதில் 25000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு பெகிடாவுக்கு எதிராக அதை விட அதிகமாக 35000 பேர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை ஆதரித்து பேரணியாக சென்றர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃப்ரான்ஸ் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் காரணமாக இருந்திருக்க மாட்டார்கள் என்று ஜெர்மன் மக்கள் முடிவெடுத்துள்ளதையே இந்த ஆதரவு காட்டுகிறது. ஜெர்மன் சான்ஸ்லர் மார்கெல்லின் இஸ்லாத்துக்கு ஆதரவான பேச்சினால் பெகிடா அமைப்பினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஃப்ரான்ஸ் தாக்குதலை வைத்து ஐரோப்பாவிலும் முக்கியமாக ஜெர்மனியிலும் இஸ்லாமியர்களை ஒழித்து விடலாம் என்று திட்டமிட்ட எதிரிகளை இறைவன் மண்ணைக் கவ்வ வைத்துள்ளான். எல்லா புகழும் இறைவனுக்கே!

“அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். இறைவனும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் இறைவன் மிகவும் மேன்மையுடையவன்”

அல்குர்ஆன் 8:30 

தகவல் உதவி:
டெலிக்ராஃப், சவுதி கெஜட்
13-01-2015


Advertisement

Close