அதிரையில் தீவிர வாகன சோதனை!

அதிரையில் காவல்துறையினரால் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நேற்று முன் தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 3 நாட்களாக அதிரை வண்டிப்பேட்டை, ஈ.சி.ஆர்.சாலை, பேருந்து நிலையம் அருகே, பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப், சேர்மன் வாடி, முத்துப்பேட்டை ரோடு போன்ற முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்கள், 18 வயதுக்கு கீழாக பைக் ஓட்டும் சிறுவர்களை பிடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Close