32 இணைய தளங்களுக்கு விதித்த தடை நீக்கம்

மத்திய அரசு 32 இணையதளங்களுக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருவதாக 32 இணைய தளங்களுக்கு தடை விதித்து கடந்த மாதம் 17ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. நவம்பர் மாதம் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, இந்த இணைய தளங்கள் பக்கங்களை பார்க்க, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69ஏ-யின் கீழ் தடை செய்யப்பட்டன. இதில் கிட்ஹப், சோர்ஸ்போர்ஜ், டெய்லிமோஷன், பேஸ்ட்பின் உள்ளிட்ட பிரபல இணையதளங்களும் அடங்கும். 

இவற்றில் கிட்ஹப், சோர்ஸ்போர்ஜ் ஆகிய இணைய தளங்களை மென்பொருள் புரோகிராமர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இணைய தளங்களை தடை செய்வதற்கு முன்பு இது குறித்த தெளிவான வரையறைகள் உருவாக்கி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் கடந்த மாதம் சில இணையதளங்களுக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்டர்நெட் சேவை அமைப்புகள் அரசுடன் உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக கொடுத்த உறுதியை தொடர்ந்து, 32 இணையதளங்களுக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Close