Advertisement

' />

அதிரை ECR – போஸ்ட் ஆபிஸ் ரோடு கால்வாய் அமைக்கும் பணி குறித்து சேர்மன் அஸ்லம் ஆய்வு!

அதிரை ECR சாலையில் இருந்து திலகர் தெரு வழியாக போஸ்ட் ஆபிஸ் தெரு தேவா ஜுவல்லரி வரை பல நாட்களாக கால்வாய் பிரச்சனையும் கழிவு நீர் தேங்கும் நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு கற்கள் சாலையிலேயே பல நாட்களாக கிடந்தது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பல முறை நமது அதிரை பிறை தளத்திலும் செய்திகளும் காணொளிகளும் பதிந்தோம். இந்நிலையில் இந்த கால்வாயை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களும் செயல் அலுவலரும் பார்வையிட்டனர்.
இது குறித்து சேர்மன் அஸ்லம் அவர்கள் நமது செய்தியாளரிடம் கூறியதாவது…இன்னும் மூன்று நாட்களுக்குள் இப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி துவங்கும் எனவும், இக்கால்வாயில் அடைத்திருக்கும் மண், கற்கள் அகற்றப்பட்டு வருகிறது எனவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Close