அதிரை காட்டுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மீலாது நபி விழா!

அதிரை காட்டுப்பள்ளி வளாகத்தில் உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் கமிட்டி சார்பில் இன்று மாலை மீலாது நபி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு TIYA மற்றும் அதிரை அனைத்து முஹல்லாக் கூட்டமைப்பு தலைவர்  M.M.S.சேக் நசுருதீன் தலைமை வகித்தார். மேலும் இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.பி. நசுருதீன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மறைஞான பேழை ஆசிரியர் S.ஹுசைன் முஹம்மது ஹக்கீயுல் காதிரி, மன்பயீ, அவர்கள் “நானிலம் போற்றும் நன்னபி நாதர்” என்ற தலைப்பில் உரையாற்றினர்.மேலும் இந்நிகழ்ச்சியில்   மெளலவி, ஹாபில்.P.A.காஜா முயினுதீன், பாகவி உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர்  அவர்கள் “பெருமானார் (ஸல்) காட்டி தந்த வெற்றி வாழ்க்கை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

மேலும் நிகழ்ச்சிக்கு முன் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் .


Advertisement

Close