முதலமைச்சர் கோப்பை போட்டியில் தஞ்சை அணிக்காக களம் இறங்கிய அதிரை வீரர் ஆசிப்!

முதலமைச்சர் கோப்பைக்கான தஞ்சை மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள்  6 ம் தேதி துவங்கியது. இதில் தஞ்சை விளையாட்டு விடுதி அணிக்காக அதிரை சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆசிப் அஹ்மத் அவர்களும் பங்கு கொண்டு விளையாடினார் .இந்த கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது .

இதில் பட்டுக்கோட்டை vs தஞ்சை விளையாட்டு விடுதி அணியினர் மோதினர் .இதில் பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்று முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை தஞ்சை அணியினர் பிடித்தனர் .மேலும் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது .

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டு உள்ள புகைப்படத்தில் வெள்ளை டி-ஷர்ட் அணிந்து உள்ளவர் அதிரை கைப்பந்து விளையாட்டு வீரர் ஆசிப் அஹ்மத் .  

Advertisement

Close