அதிரை இளைஞர்களின் பாராட்டிற்க்குரிய செயல்!

அதிரை வண்டிப்பேட்டை சாலையில் மாடு ஒன்று விபத்தில் காயமடைந்து கிடந்தது. பொதுமக்கள் அந்த மாடு இறந்து விட்டதாக எண்ணி கண்டும் காணாமலும் சென்றனர். இந்நிலையில் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து அந்த மாட்டினை பக்குவமாக ஒரு டெம்போவில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அந்த மாட்டிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அந்த மாடு நல்ல உடல் நிலையில் உள்ளது. கடந்து சென்ற பலருக்கு மத்தியில் அந்த வாயில்லா ஜீவனை தானாக வந்து காப்பாற்றிய இந்த இளைஞர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது போன்று தான் ஊரில் எங்கு ஒரு விபத்து நடந்தாலும் விரைந்து வந்து நமதூர் இளைஞர்கள் தேவையான உதவிகள் செய்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த பொதுநல சேவை நமதூருக்கு அவசியம் தேவை!

Advertisement

Close