சவூதியில் இன்று முதல் கடுங்குளிர் வீசும்!

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வீசும் பெருங்காற்றின் காரணமாக, சவூதி அரேபியா வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் கடுமையான குளிருடன் கூடிய காற்றும், பனிப் பொழிவும் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை இருக்கும்.

இந்த குளிர் சவூதி அரேபியா முழுவதும் பரவலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. தாபூக், துரைப் மற்றும் அல்-ஜூப் போன்ற பகுதிகளில் ஜீரோ விற்கும் கீழே குளிரும், பனியும் இருக்கும். மக்கா மற்றும் மதினா பகுதிகளிலும் குளிர்காற்று வீசும்.

வியாழன் அன்று அதிக பட்ச குளிர்காற்று ஹைல், கஸ்ஸிம், கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத் பகுதிகளில் இருக்கலாம்.

வெள்ளியன்று குளிர்காற்று நஜ்ரான், ஜஸான், அஸிர் மற்றும் பஹா பகுதிகளில் இருக்கும் என Presidency of Meteorology and Environmental Protection (PME) தெரிவித்துள்ளது.

-தி. ரஹ்மத்துல்லா.

Advertisement

Close