என்றுதான் திருந்துவார்கள் நமதூர் மக்கள்!

அதிரை அரசு மருத்துவமனை எதிரே பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு மிகவும் அசுத்தமாக காணப்பட்டது. இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தனர். அப்பகுதியில் உடைந்து கிடந்த குப்பை தொட்டி ஒன்றை சீர் செய்து அதில் குப்பைகளை கொட்டுமாறு அறிவுறுத்தினர்.

ஒரு சிலர் பொது நலன் கருதி குப்பைகளினை அந்த குப்பைத் தொட்டியில் கொட்டினாலும் பெரும்பாலானோர் எந்த அக்கரையும் இன்றி திறந்த வெளியில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து ஒரு இளைஞர் மன வேதனையுடன் நமதூர் மக்கள் சிலர் பொது அக்கரையின்றி இருப்பது குறித்து தெரிவித்தார்.

நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்ள கூடாது. சுற்றுபுறங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Advertisement

Close