டெல்லி புலிதாக்குதலைத் தொடர்ந்து!சட்டீஸ்கர் கரடி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!(வீடியோ)

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் புது தில்லியில் வெள்ளைப் புலி ஒன்று அதன் கூண்டினுள் தெரியாமல் விழுந்த வாலிபர் ஒருவரை கடித்துக் கொன்றது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸாப் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

இந்நிலையில், இதே போல், சட்டீஸ்கர் மாநிலம், சுராஜ்பூர் என்ற இடத்தில் வனத்துறை அதிகாரி ஒருவரை கரடி ஒன்று கடித்து துடிக்கத் துடிக்கக் கொன்ற சம்பவம் வாட்ஸாப் மூலம் வீடியோவாகப் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் சுராஜ்பூர் பகுதியில் கரடி உள்ளூர் வாசிகளை அச்சுறுத்துவதாகவும் ஏற்கனவே ஒருவரைக் கொன்றுவிட்டதாகவும் கிடைத்த தகவலை அடுத்து கரடியை கட்டுப் படுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி, கரடியை பிடிக்க முற்பட்ட வனத்துறை அதிகாரி ஒருவரை கரடி கீழே தள்ளி அவரது முகத்தை கடித்து குதறி எடுத்தது. துடிக்க துடிக்க கரடியால் கடிபட்ட அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுற்றியிருந்த மக்கள் கற்களை வீசி கரடியை விரட்டி, அதிகாரியை காப்பாற்ற முற்பட்டனர்.

ஏற்கனவே கரடி இருவரைக் கொன்றிருந்த நிலையில், யாரும் அருகில் சென்று கரடியை விரட்ட முன்வரவில்லை. இதன் போது தான் தூரத்திலிருந்து மொபைல் மூலம் சிலர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்குப் பின் கரடி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கரடிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், ஏற்கனவே இந்தக் கரடி அப்பகுதியில் இருந்த இருவரை கடித்துக் கொன்றதாக வனத்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள். 

Advertisement

Close