தொடர் வெற்றிகளை குவித்து வரும் அதிரை விளையாட்டு வீரர்கள்!(படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் இன்று புதுப்பட்டினம் வெளிவயலில் துவங்குகிறது.இதில் தஞ்சை மாவட்ட பள்ளி ,கல்லூரி,மற்றும் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் .

இதில் அதிரை மேலத்தெரு WSC கைப்பந்து அணியை சேர்ந்த ஆசிப் அஹ்மத் மற்றும் அலாவுதீன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தனர் .வெற்றி பெற்ற இவர்களுக்கு ரூ.500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .மேலும் இவர்கள் மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் .

மேலும் காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக சையத்,ஹாஜா சலாவுதீன் ,சலீம் ,நவீத் அஹ்மத் ,சைபுதீன் ஆகியோர் கடற்கரை கால்பந்து விளையாட்டில்  கலந்து கொண்டு முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.வெற்றி பெற்ற இவர்களுக்கு ரூ.200 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது . 

இதைபோல் அண்மையில் பல பகுதிகளில்  நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அதிரை விளையாட்டு வீரர்கள் வெற்றிகளை குவித்து நமதூருக்கு பெருமை தேடி தந்த வண்ணம் உள்ளனர்.வெற்றி பெற்ற இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .


Advertisement

Close