இனி விசயத்திற்கு வருவோம்

முஹமது யாசீன் அவர்கள் விளையாட்டில் மட்டுமல்ல இஸ்லாமிய அற நெறிகளிலும் சிறந்து விளங்குவது கண்டிப்பாக போற்றத்தக்கதே!

மேலத்தெரு சாணா வயல் பகுதியில் கடந்த முறை ஊருக்கு வந்திருந்தபோது ஒரு பள்ளிவாசலை கட்ட வேண்டும் என்ற நிய்யத்தில் வாங்கிப் போட்ட நிலத்தில் இந்த முறை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முஸல்லா எனும் தொழுகை கூடத்தை தனது சொந்த செலவில் கட்டி வருகிறார் மேலும் வரும் ரமலான் மாதம் முதல் செயல்பட துவங்கும் இன்ஷா அல்லாஹ். {ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் தொழுகை நடைபெற்று வரும் மைதானத்தின் நேர் பின்புறம் உள்ளது}

கடந்த வருடம் புனித ஹஜ்ஜை முடித்துள்ள முஹமது யாசீன் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றுவதில் ஆர்வமுள்ள தனது 9 வயது மகனை ஒர் தாயியாக வளர்க்க ஆசைபடுகிறார்.

அல்லாஹ் சகோதரர் முஹமது யாசீன் அவர்களின் தூய பணிகளை ஏற்று மறுமையில் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நற்கூலிகளை வழங்குவானாக! என அனைவரும் இறைஞ்சுவோம்.

நினைவும் சந்திப்பும்
அதிரை அமீன்
Advertisement

' />

அதிரை மேலத்தெரு சாணாவயலில் புதிய பள்ளிவாசல் கட்டும் விளையாட்டு வீரர் யாசின்! (படங்கள் இணைப்பு)

இன்று கூட்டத்தில் ஒர் முகமாய் மறைந்திருந்தாலும் அதிரைக்கு பெருமை சேர்க்கும் பல விளையாட்டுச் சாதனைகளின் சொந்தக்காரர் நமதூர் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகமது ஹாஜியார் அவர்களின் பேரனும் முகமது மீராசா அவர்களின் மகனுமான முஹமது யாசீன் அவர்கள். 

இன்று ஓர் ஆஸ்திரேலிய குடிமகனாக திகழ்ந்தாலும் 80களில் கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் படித்த காலத்திலும், திருச்சியில் பட்டப்படிப்பு படித்த காலத்திலும், அதிரையிலும் பல விளையாட்டுகளிலும் ஏக காலத்தில் சிறந்து விளங்கியவர். குறிப்பாக, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து, ரிங்பால் என அனைத்திலும் கலக்கியதோடு உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகளிலும் இந்திய அளவில் சாதனைகளை படைத்தவர்.

பன்முக திறமையுடைய இவருடைய விளையாட்டு சாதனைகளை நினைவுகூர்வது கண்டிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்.

1. அகில இந்திய அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையில் தஞ்சாவூரில் நடைபெற்ற குண்டு ஏறிதல் போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இந்த சாதனை அன்றைய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தியில் பலமுறை காண்பிக்கப்பட்டது. அன்றைக்கு DD மட்டும் தான் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

2. பாரதிதாசன் பல்கலைகழக அளவில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார்.

3. கேரள மாநிலம் கோட்டயத்தில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழக அணிகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.

4. தமிழக பள்ளிகளுக்கிடையில் நடைபெறும் வட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களுக்குள் பலமுறை வந்துள்ளார்.

5. அதிரையில் செயல்பட்ட நூருல் ஹசன் நினைவு அணி மற்றும் WCC ஆகிய கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்து தனது அணியை பலமுறை வெற்றிபெற வைத்துள்ளார்.

6. இன்று 40 வயதை பூர்த்தி செய்துள்ள நிலையிலும் ஆஸ்திரேலிய சிட்னி கிரிக்கெட் கிளப்பிற்கு உட்பட்ட சவுத் சிட்னி ‘B’ அணியில் வீரராக இடம்பெற்று இன்றும் துடிப்புடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close