கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ₹57,000 நிதி உதவி செய்த அதிரையர்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சார்ந்த கூலித்தொழிலாளி செய்யது என்பவரின் மகன் வஸிம் அஹ்மது ( வயது 5 ) என்ற சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் அவதியுற்று வருகின்றான் என்றும், இச்சிறுவனின் மருத்துவ செலவு வகைக்கு  ₹ 6 இலட்சம் வரை தேவைப்படுவதாக கூறி கடந்த [ 19-11-2014 ] அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் கிளையின் சார்பில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்த அறிவிப்பை பார்த்த அதிரை எஸ் ஏ இம்தியாஸ் அகமது ரூபாய் 57.000 அவரின் சகோதரர் மூலம் அதிரை கிளை நிர்வாகிகளிடம் தரப்பட்டது அந்த பணத்தை மேலப்பாளையம் கிளைத்தலைவருக்கு அனுப்பப்பட்டு அதை 29 வார்டு தலைவர் ரம்ஜானிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Advertisement

Close