FLASH NEWS: அதிரையிலிருந்து கட்டுமாவடி செல்லும் போது விபத்து! அதிரையர் படுகாயம்!

அதிரையை சேர்ந்தவர் சேக் முகைதீன். ஆட்டோ ஓட்டுனர். இவர் ஒரு மணி நேரத்துக்கு முன்பு கட்டுமாவாடியை சேர்ந்த ஒரு பெண்மணியை சவாரியாக ஏற்றிக்கொண்டு கட்டுமாவாடி புறப்பட்டார். இந்நிலையில் புதுப்பட்டினம் அருகே இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டூரிஸ்டர் வேன் ஆட்டோவை முந்துவதற்காக செல்லும் போது ஆட்டோ நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது. 

இதில் சேக் முகைதீன் அவர்களுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் இவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

                                                                                                      -File image

Advertisement

Close