அதிரையில் பரபரப்பாக நடைபெற்று வரும் இளம் இஸ்லாமியன் முன்பதிவு!

அதிரையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி இளம் இஸ்லாமியன் மார்க்க அறிவு போட்டியின் முன்பதிவு நேற்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிக்கான முன்பதிவின் இரண்டாம் நாளான இன்றும் மாணவர்கள் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மதினா நெட்வொர்க்ஸில் புத்தகம் வழங்கப்படுகிறது. இன்னும் முன்பதிவு செய்யாத மாணவர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு இளம் இஸ்லாமியன் போட்டி ஏற்ப்பாட்டாளர்களால் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்போட்டி குறித்த முழு விபரத்தை அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
http://www.adiraipirai.in/2014/12/blog-post_859.html

Advertisement
Close