Adirai pirai
posts

DR.PIRAI-உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்!

பெண்களுக்கு பிரத்யோகமாக வரக்கூடிய சில நோய்களிலினின்று பெண்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய ஆற்றல் சில கனிகளுக்கு உண்டு. அவற்றுள் முதன்மையாக கருதக்கூடிய கனி அத்திப்பழம். இது பெண்களுக்கு மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்த சோகையை தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

இதன் பூவை காண்பது மிக அரிது. அதனாலேயே “அத்தி பூத்தது” என்ற பழமொழி உருவாகியது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

100 கிராம் அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
 • ஊக்கச்சத்து  – 249 kcal
 • மாவுச்சத்து – 63.87 கிராம்
 • சர்க்கரைச்சத்து – 47.92 கிராம்
 • நார்ச்சத்து – 9.8 கிராம்
 • கொழுப்புச்சத்து – 0.93 கிராம்
 • புரதச்சத்து          – 3.30 கிராம் 

அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய  Antioxidents உள்ளன.

அத்திப்பழத்தின் உள்ள கனிமங்கள்:-
 • கால்சியம்          – 162 மி.கி
 • இரும்புச்சத்து – 2.03 மிகி
 • மெக்னீசியம் – 68 மிகி
 • பாஸ்பரஸ் – 67 மிகி
 • பொட்டாசியம் – 680 மிகி
 • ஸின்ங் சத்து  – 0.55 மிகி
 • அதிக நார்ச்சத்து, புரதம் – 4 கிராம்

அத்தியின் மருத்துவ பயன்கள்:-

இரத்த சோகை:-
உலர் அத்தி உண்பதால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும் இரத்த சோகை குணமடைகிறது. வயிற்றுப்போக்கு குணமடைகிறது. வாய், மூக்கு வழியே வெளியேறும் இரத்தப்போக்கை அத்திப்பழம் குறைக்கிறது.
வாய்ப்புண்:-
இரத்த சோகையாலும், மன அழுத்தத்தாலும் நாக்கிலும், வாயில் உட்புற பகுதிகளில் ஏற்படும் புண்ணை அத்திப்பழம் குணமாக்குகிறது.
சளித்தொல்லை:-
அத்திப்பழம் கப சம்பந்தமான நோய்களை நீக்குகிறது. கோழையை வெளியேற்றுகிறது.
ஜீரண சக்தி:-
அத்திப்பழம் உண்பதால் உணவு விரைவில் ஜீரணமடையும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளை நன்கு செயலாற்ற செய்கிறது.
அத்தி தேனூறல்:-
 • அத்திப்பழத்தை சுத்தம் செய்து 5 நாட்கள் நிழலில் காய வைத்து,பதப்படுத்தி தேனில் ஊற வைத்து உட்கொண்டால் தாது விருத்தியடையும், ஆண்மை பெருகும், உடல் புஷ்டி உண்டாகும் இரத்த விருத்தி உண்டாகும்.
 • நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்
 • போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்
 • அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும்
 • அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும்.
 • அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்
 • பழங்களை பிரித்து தேனிலும், பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.
 • பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டு தூளை செலுத்தி இரவு பனியில் வைத்து காலையில் உண்டு வர உட்சூடு தணியும்.
 • அத்திப் பழம், பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதை பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கற்கண்டு இவற்றை சம எடையாக பொடித்து பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஒரு வாரம் ஊறிய பின் தினமும் 10-15 மி.லி.வீதம் காலையில் உட்கொள்ள பலம், உடல் புஷ்டி, ஆண்மை பெருகும்.
 • சீமை அத்திப் பழத்தை தினமுட் 1 வேளை உண்டு வர வெண் புள்ளிகள், வெண் குட்டம், தோலின் நிறமாற்றம் குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
 • மேலும் அத்திப் பழத்தினை கொண்டு அத்தி பொரியல், அத்திக் கூட்டு, அத்தி ஜாம் முதலியன செய்தும் உட்கொள்ளலாம்.
 • தினசரி இரண்டு அத்திப் பழங்களை உண்டு வர இரத்த உற்பத்தி மற்றும் உடல் பருமன் அடையும்.
 • தினமும் இரண்டு அத்திப் பழங்களை உண்டு வர உடல் அழகாவதுடன், முழு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

Advertisement