அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை சாலை சீரமைக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது வந்தது . மேலும் மழை காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக இருந்ததால் பல விபத்துகளும் ஏற்பட நேரிட்டது .இதனால் இந்த சாலை சீரமைக்க கோரி பல தரப்பினர் ,பொது மக்கள் என பலர் கோரிக்கை வைத்தனர் .

இதனையடுத்து  நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சீரமைக்க ₹ 1.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது .இதற்கான பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகள் ,வீட்டு சுவர்கள் அனைத்தும் காவல் துறை உதவி உடன்   ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.  




Advertisement

Close