கொள்ளையடிக்கும் ஏர்டெல் நிறுவனம்! வைபர், ஸ்கைப், லைன் இல் பேசினாலும் இனி பணம் எடுக்கப்படும்!

இதுவரை Skype, Viber, Line உள்ளிட்ட apps மூலமாக உள் நாட்டு, வெளி நாட்டு நண்பர்களுடன் இலவசமாக பேசி வந்தோம். ஆனால், இனிமேல் அது நடக்காது. கொள்ளை பணம் பறிக்கும் ஏர்டெல் நிறுவனம் இந்த சேவைகள் அனைத்தையும் “கட்டண சேவைகளாக” மாற்றி விட்டது.

ஆம்..இந்தியாவிலேயே முதன் முறையாக ஏர்டெல் நிறுவனம் தான் இந்த அநியாயத்தை அறிமுக படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Skype, Viber, Line உள்ளிட்ட எந்த calling app மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினாலும் அதற்கு கட்டணம் நமது ‘Main Balance’ல் இருந்து எடுத்து விடுவார்கள்.

அதாவது, 3G மூலம் பேசினால், நிமிடத்திற்கு 1 ரூபாய் 80 காசுகள். 2G மூலம் பேசினால், நிமிடத்திற்கு 4 ரூபாய் 50 காசுகள். இது வெறும் அழைப்பிற்கான கட்டணம். வீடியோ அழைப்பிற்கான கட்டணம் இதை விட அதிகம்.

Airtel 1GB 2Gயின் கட்டணம் 149 ரூபாய். முன்பு 2Gயில் Viber மூலமாக ஒரு நண்பரிடம் பேசும்போது, எனக்கு ஒரு 50MB data மட்டும் தான் குறையும். ஆனால் இப்போது அதே போல் பேசினால் 50MBயும் குறையும், (பத்து நிமிடங்கள் பேசியிருந்தால்) 45 ரூபாய் கட்டணமும் குறையும். இப்பொழுது புரிகிறதா…??

இணையதளம் மூலம் இலவசமாக பேசிக்கொள்வதால் தங்கள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுகிறது என இவர்கள் கூறலாம். ஆனால், அழைப்புகளை விட நாம் இணையதளம் பயன்படுத்த தான் அதிக பணம் அவர்களுக்கு கட்டணமாக வாரி இறைக்கிறோம். உதாரணமாக, இணைய வசதி இல்லாதபோது மாதத்திற்கு 200, 300 ரூபாய் தான் ரீசார்ஜ் செய்வோம். ஆனால், இப்போது, அந்த 200 ரூபாயை சேர்த்து ‘Net Pack’ என்று மாதம் 500 லிருந்து 800 வரை அதாவது சுமார் 1000 ரூபாய் கட்டணமாக கொடுக்கிறோமே…இதை எந்த கணக்கில் வைப்பது?

இதை தவிர, சமீபத்தில் தான் 2G 126 ஆக இருந்ததை 149 ஆக உயர்த்தினார்கள். 3G 127 ஆக இருந்ததை 198 ஆக உயர்த்தினார்கள். இப்போது இந்த லாபமும் போதாதென்று Skype, Viber, Line உள்ளிட்ட இலவச அழைப்புகளையும் கட்டணமாக மாற்றி கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

நண்பர்களே, ஏர்டெல்லில் மட்டும் இந்த திட்டம் இருந்தால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறி விடுவார்கள் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், இந்த திட்டம் ஏர்டெல் மட்டுமின்றி அனைத்து நிறுவனத்திற்கும் வரும்.

இது அநியாயம்…கண்டிக்கப்பட வேண்டியது, தடுக்கப்பட வேண்டியது என நீங்கள் நினைத்தால், இச்செய்தியை பகிரவும் !!

Advertisement

Close