அமீரக துபாய் மண்டல அதிரை TNTJ கிளை சார்பாக நடைபெற்ற மாதாந்திர ஆலோசணை கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக துபாய் மண்டல அதிரை TNTJ கிளை சார்பாக இன்று 26/12/2014 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துபை JT மர்க்கஜில் மாதாந்திர ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டடு எடுத்த தீர்மானங்கள் :
2015 கல்வியாண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிரையில் துவங்கயிருக்கும் இஸ்லாமிய பெண்கள் மதரஸா கல்லூரி சம்மந்தமாக பல ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன.
அதிரையில் TNTJ கிளை சார்பாக இஸ்லாமிய. நூலகம் அமைப்பது குறித்து பேசப்பட்டது.
நடுத்தெருவில் உள்ள ஆய்சா மகளிர் அரங்கத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தும் மார்க்க சொற்ப்பொழிவு பயானை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அனைவரிடத்திலும் கலந்து ஆலோசிக்கப் பட்டது.
இக்கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களும் அதிகமானோர் கலந்துக் கொண்டார்கள். இதில் நல்லபல பயன்தரக்கூடிய திட்டங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Close