அதிரை பேருந்து நிலைய சாலையில் குழிகள் அடைக்கப்பட்டது!

 அதிரையில் கடந்த பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பல சாலைவிபத்துகளும், வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமங்களையும் கொடுத்து வந்தது.

இது குறித்து பல பதிவுகள் நம் அதிரை பிறை தளத்தில் பதிந்துள்ளோம். இந்நிலையில் நேற்று அதிரை பேருந்து நிலையம் முதல் காவல் நிலையம் வரை உள்ள சாலையில் உள்ள குழிகள் ஜல்லி கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது.

Advertisement

Close